முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்..!! இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை..!! வீடு தேடி வரும் பொருட்கள்..!!

தமிழ்நாட்டில் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை. அவர்களின் வசதிக்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், வயது முதிர்ந்தோரும், உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களின் வீடுகளுக்கே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நேரடியாக கொண்டு செல்லப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனங்களை முதல்வர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் முதற்கட்ட பயனாளிகளுக்கு பொருட்களையும் வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் 21.7 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மொத்தம் 34,809 ரேஷன் கடைகள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 20,42,657 பேரும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் இந்த புதிய திட்டத்தின் மூலம் நேரடி நன்மை பெறுவார்கள்.

பயனாளிகள் எந்த வரிசையிலும் நின்று காத்திருக்க வேண்டாம் என்ற நோக்கில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறுகளில், அவர்களது வீடுகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நேரிலேயே விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.1.1 லட்சம் வருமானம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!