மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (UPSC), பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 213 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ள அரசுத் துறைகளில் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரங்கள் :
கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional Government Advocate): 5 காலியிடங்கள். மாதம் ரூ.1,18,500 சம்பளம்.
கூடுதல் சட்ட ஆலோசகர் (Additional Legal Adviser): 2 காலியிடங்கள். மாதம் ரூ.1,18,500 சம்பளம்.
உதவி சட்ட ஆலோசகர் (Assistant Legal Adviser): 6 காலியிடங்கள். மாதம் ரூ.1,18,500 சம்பளம்.
உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Government Advocate): 1 காலியிடம். மாதம் ரூ.67,700 சம்பளம்.
துணை அரசு வழக்கறிஞர் (Deputy Government Advocate): 2 காலியிடங்கள். மாதம் ரூ.78,800 சம்பளம்.
துணை சட்ட ஆலோசகர் (Deputy Legal Adviser): 12 காலியிடங்கள். மாதம் ரூ.78,800 சம்பளம்.
விரிவுரையாளர் (Lecturer – Urdu): 15 காலியிடங்கள். மாதம் ரூ.53,100 சம்பளம்.
மருத்துவ அதிகாரி (Medical Officer): 125 காலியிடங்கள். மாதம் ரூ.53,100 சம்பளம்.
கணக்கு அதிகாரி (Accounts Officer): 35 காலியிடங்கள். மாதம் ரூ.47,600 சம்பளம்.
உதவி இயக்குநர் (Assistant Director): 3 காலியிடங்கள். மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி : சட்டப் பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், விரிவுரையாளர் பதவிக்கு உருது மொழியில் முதுகலைப் பட்டமும், B.Ed. பட்டமும் பெற்றிருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு : 21 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆள் சேர்ப்பு தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 2.10.2025
விண்ணப்பிப்பது எப்படி..? விண்ணப்பதாரர்கள் UPSC-இன் https://upsc.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-13-2025-Engl-120925.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
Read More : விவசாயிகளே..!! ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க மானியம்..!! பயிற்சியும் உண்டு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!