கோவையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டன் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளவுள்ளதால், இப்பகுதி இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்தவர்களும் பங்கேற்கலாம்.
பதிவு செய்வது எப்படி..?
இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் http://forms.gle/MDYsv6Uq6tw2CGf39 என்ற படிவத்தை நிரப்பி பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்கள் பெயர், தந்தையின் பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்யலாம்.
மேலும், வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு 0422 2642388, 94990 55937 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.