இணையம் மற்றும் கணினி வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ChatGPT, Gemini, Claude போன்ற தொழில்நுட்பங்களால், இன்று நூற்றுக்கணக்கான வேலைகளை சில நொடிகளில் முடிக்க முடிகிறது. இந்த மாற்றம் தொழில்நுட்ப சாதனையாக மட்டுமின்றி, மனிதர்களின் வேலைவாய்ப்பையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.
தற்போது பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை “மனிதர்களை விலக்கி, AI-ஐ வேலைக்கு அமர்த்தும்” நிகழ்வுகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டேட்டா என்ட்ரி, வாடிக்கையாளர் சேவை, எழுத்தாளர்கள், கணக்கியல் உதவியாளர் போன்ற நிலையான வேலைகள், ஏஐ தொழில்நுட்பத்தால் குறைந்து வருகின்றன. ஏற்கனவே சில BPO நிறுவனங்களில், பெரும்பாலான கஸ்டமர் சர்வீஸ் பணிகள் AI மூலம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், மனித பணியாளர்களுக்கு வேலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், AI-யால் பல நன்மைகளும் இருக்கின்றன. தொழில்நுட்பம் என்பது ஒருபுறம் வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். புதிய வேலைவாய்ப்புகளாக AI Developer, Prompt Engineer, Data Analyst, AI Ethics Officer, Cybersecurity Expert போன்றவை உருவாகி வருகிறது. தொழில்நுட்பத் துறையில் புதிதாக நுழையும் இளம் தலைமுறையினருக்கு இது ஒரு புதிய வேலைவாய்ப்பாக அமையும்.
தற்போது அனைத்து துறைகளிலுமே ஏஐ நுழைந்துவிட்டது. ஆனால், மனித உணர்வுகள் கொண்ட மருத்துவர், செவிலியர், ஆசிரியை, மின்சாதன தொழிலாளி, கட்டட வேலை, சமையல், ஓட்டுநர் போன்ற தொழில்கள் AI-யால் மாற்ற முடியாதவை. ஏனென்றால், இவை சிந்தனையும் உணர்வையும் சார்ந்தது.
நிபுணர்கள் கூறுவது போல, “ஏஐ தொழில்நுட்பம் உங்களை வேலையை இழக்கச் செய்யாது. ஆனால், AI-யைப் பயன்படுத்த தெரிந்த ஒருவர், உங்கள் வேலையை பறிக்க வாய்ப்புள்ளது” என்பதுதான் இன்றைய உண்மை. எனவே, தங்கள் வேலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், மனிதர்கள் புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, Digital Skills, Logical Thinking, Creativity, Emotional Intelligence ஆகியவை எதிர்காலத் தொழில்கள் தேடும் முதன்மையான தகுதிகளாக இருக்கப் போகின்றன.
மேலும், ஏஐ வருகையால் சில நிறுவனங்களுக்கு நேரம், செலவு, மனித தவறுகள் குறைவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் மனிதர்கள் வேலையை இழக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்தாலும், மற்றொரு பக்கம், “ஏஐ உங்களது உதவியாளராக மாறும்” என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏஐ என்பது ஒரு தொழில்நுட்ப சாதனையாக இருந்தாலும், அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் உணரத் தொடங்கியுள்ளது. தற்போது AI-ஐ எதிர்க்க வேண்டிய காலம் அல்ல. அதனுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய காலம். இன்று புதிய திறன்களை கற்றுக்கொள்வதே, நாளைய வேலைவாய்ப்பை உருவாக்கும்.. மேலும், நம்மை பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கும்.
Read More : 40 வயதை கடந்துவிட்டீர்களா..? இந்த 7 மருத்துவ பரிசோதனைகள் உங்கள் வாழ்க்கையை காக்கும்..!!
Leave a Reply