நம் அன்றாட வாழ்க்கையில், பல நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகிறோம். அவற்றில் இரவு தூங்குவதற்கு முன் பால் குடிக்கும் பழக்கம் மிகவும் பயனுள்ளதாக கூறப்படுகிறது. இது வெறும் சுவையானது மட்டுமல்ல.. உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. எனவே, இரவில் பால் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடல் எடை : சிலருக்கு இரவில் திடீரென பசி எடுக்கும். அந்த சமயத்தில் நொறுக்கு தீனிகளை தவிர்த்துவிட்டு, ஒரு கப் சூடான பால் குடிக்கலாம். பால் குடிப்பதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். மேலும், இதில் உள்ள புரதங்கள், தசைகளை உருவாக்க உதவுவதுடன், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும். இதனால், உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.
தூக்கம் மேம்படும் : பாலில் டிரிப்டோபான் (Tryptophan) மற்றும் பயோ ஆக்டிவ் பெப்டைடுகள் (Bioactive Peptides) ஆகியவை நிறைந்துள்ளதால், உடலின் வளர்ச்சிக்கும், புரதங்கள் மற்றும் தசைகளின் உருவாக்கத்திற்கும் அவசியமான ஒரு அமினோ அமிலமாகும். இது, உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இந்த ஹார்மோன்கள் மன அமைதியையும், நல்ல தூக்கத்தையும் நமக்கு தருகிறது. இதனால், இரவில் நிம்மதியான தூக்கம் பெற வேண்டும் என்றால், தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்துவது நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எலும்பு மற்றும் இதயம் ஆரோக்கியம் : தினமும் பால் அருந்துவதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். எலும்புத் தேய்மானம் போன்ற நோய்கள் தடுக்கப்படும். அதேபோல், குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பாலை தொடர்ந்து குடித்து வந்தால், கெட்ட கொழுப்பின் அளவு குறையும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்படும். மாட்டுப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
செரிமானம் : தூங்கச் செல்வதற்கு முன் பாலில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால், அது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். பால் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். தேன் செரிமானத்திற்கு உதவும். இந்த கலவை, வயிற்றில் அமிலத்தன்மையை குறைத்து, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி : சிலர் குளிர்ந்த காற்று அல்லது ஏசியில் நீண்ட நேரம் இருப்பதால், சளி அல்லது காய்ச்சல் ஏற்படும். இரவு தூங்கச் செல்லும் முன் சூடான பால் குடித்தால், நல்ல பலனைத் தரும். பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும், வலுப்படுத்தும். அதேபோல், சருமத்திற்கு புத்துயிர் கொடுத்து பொலிவுடன் இருக்க உதவும்.
இரவில் பால் அருந்துவது என்பது ஒரு நல்ல பழக்கம் தான். ஆனால், லாக்டோஸ் (Lactose) ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அருந்துவது அவசியம்.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை.
Read More : 8, 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! தமிழ்நாடு அரசு துறையில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலை..!!