தினமும் குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பல பெற்றோருக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். குழந்தைகள் சாப்பிட விருப்பமில்லாத நேரங்களில் பலர் எளிதாக விருப்பப்படும் ஒன்று பிஸ்கட். இது ஒரு ஸ்நாக்ஸ் போலவும், எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், குழந்தைகளின் உடல்நலம், வளர்ச்சி, மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியவை தான் இந்த பிஸ்கட். இது தெரியாமல் பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட்டை அடிக்கடி தருகின்றன.
பிஸ்கட்டில் என்ன உள்ளது..?
பிஸ்கட் என்பது குழந்தைகள் விரும்பும் ருசிகரமான உணவாக இருக்கலாம். ஆனால், அதில் ஆபத்தான சில ரசாயனங்கள் உள்ளன. பிஸ்கட்டில் அதிக சர்க்கரை, அதிக அளவிலான மெல்லிய கோதுமை, உயர் கொழுப்பு, செயற்கை சுவை, வாசனை, நிறங்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் :
குழந்தைகளுக்கு தினமும் பிஸ்கட் கொடுத்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். உடல் எடை கூடும். தொண்டை, வயிற்று, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உணவுப் பழக்கத்தையே மாற்றிவிடும். சத்துள்ள உணவுகளுக்குப் பதிலாக ஜங் ஃபுட் எனப்படும் துரித உணவுகளுக்கு குழந்தைகள் அடிமையாக வாய்ப்புள்ளது.
பின் விளைவுகள் :
பெண் குழந்தைகளுக்கு வயதான பிறகு மாதவிடாய் காலத்தில் சிக்கல்கள், மதிப்பீட்டுத் திறனில் குறைவு, தசை வளர்ச்சியில் தடைகள், மன அழுத்தம் மற்றும் நரம்பியல் மாற்றங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பிஸ்கட்டுக்கு மாற்றாக என்ன தரலாம்..?
கேழ்வரகு குடைமிளகாய் அடை, நெய் கலந்து உளுந்து சுண்டல், வீட்டில் தயாரித்த சத்து மிட்டாய், மோர் அல்லது பனங்கற்கண்டு கலந்த பாலுடன் கம்பங்கூழ், பழங்கள், காய்கறி துண்டுகள், முழு தானியங்கள், கீரை வகைகள், முட்டை ஆகியவற்றை தரலாம்.
மருத்துவர்கள் சொல்வது என்ன..?
பிஸ்கட் என்பது ஒரு ‘Silent Slow Poison’ ஆகும். இதை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அவர்களின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்படும். சுவைக்கு மட்டும் கொடுப்பது என்றாலும், அதன் பின்னணி விளைவுகள் நீண்டகாலத்தில் பேரழிவாக முடிவடைகின்றன” என்று எச்சரித்துள்ளனர்.
குழந்தைகளின் உணவுப் பழக்கம் என்பது அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தின் அடித்தளம். எனவே விரைவாகவும், சுலபமாகவும் கிடைக்கிறது என்பதற்காக பிஸ்கட் போன்ற உணவுகளை தொடர்ந்து கொடுக்கக் கூடாது. தாய்மார்கள், பெற்றோர்கள் உங்கள் பாசத்தின் வெளிப்பாடாக, குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்.
Read More : ”நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.. அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில்.. வியக்க வைக்கும் திட்டம்..
English Summary :
Are Biscuits Really Safe for Kids? What Every Parent Should Know.!
Biscuits may seem like a quick snack option for kids, but are they really healthy? Learn about what’s inside commercial biscuits, the long-term health effects on children, and better nutritious alternatives every parent should consider.
Leave a Reply