தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். அதேசமயம், திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்கள் பட்டியலில், அஜித்தும் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சமீபத்தில் அஜித் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்னுடைய சுயலாபத்திற்காக எப்போதும் தனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகர் அஜித் முழுமையாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். எனவே, அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணங்கள் குறைவு என்றாலும், அதிமுகவில் அவர் இணைய ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அஜித்தை அதிமுகவில் இணைய அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் அரசியலில் விருப்பம் காட்டவில்லை என்றும் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் காலச்சக்கரம் நரசிம்மன் தெரிவித்துள்ளார்
அவர் கூறுகையில், அரசியல் வாரிசைப் பொறுத்துவரை ஜெயலலிதா ஒரு நடிகரை மனதில் வைத்திருந்தார். அவர் மக்களிடம் நடந்துகொள்ளும் விதம், பந்தா இல்லாமல் இருப்பதை எல்லாம் பார்த்து அவர் கட்சியில் இணைவதற்கு பொருத்தமான நபராக இருப்பார் என்று ஜெயலலிதா என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம்.
அம்மா பச்சை கொடி காட்டிட்டாங்க. ஆனா, அவர் வரல. அப்படி அவர் கட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக இருந்திருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் இருந்து தன்னை எப்போதும் அஜித் விலக்கியே வைத்துள்ளார். அரசியல் அழுத்தங்கள் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையே அஜித் தவிர்த்து வருகிறார். அரசியலை விட தனது லட்சியமான ரேஸிங்கில் தொடர்வதையே தேர்ந்தெடுத்த அஜித்தின் முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Read More : நீங்க வண்டி வாங்கி எத்தனை வருஷம் ஆகுது..? கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு..!!