‘ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல்’ எனக் கூறி வசூல் வேட்டை..!! அதிரடியாக அகற்றிய அதிகாரிகள்..!!

ராமேஸ்வரத்தில் சீதையை மீட்க ராமா் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, அங்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்து வந்த வழிபாட்டுத் தலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

ராமேஸ்வரம் தீவைச் சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் 117 வகையான பவளப்பாறைகள் இருக்கின்றன. இது பல கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. கடலில் இருந்து அந்த பவளப்பாறைகளை வெளியே எடுத்தால், அது உயிரிழந்து விடும். பின்னா், பவளப்பாறை உலா்ந்ததும் அது தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்று விடும்.

இந்த பவளப்பாறைகள் அழகு சாதனங்கள், விற்பனைக்காக வெட்டி எடுப்பது போன்ற காரணங்களால் அழிந்து வருகிறது. எனவே, பவளப்பாறைகளை கடலில் இருந்து எடுக்க மத்திய – மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் துணைக் கோயிலான கோதண்டராமா் கோயில் தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் கடற்கரையில் சில மோசடி கும்பல், கிணறு வடிவில் தொட்டி அமைத்து அதில் பவளப்பாறைகளை மிதக்க விட்டு, இந்த கல் மூலம் தான் ராமர் பாலம் கட்டினார் என்றும் இந்த கல்லை கடலில் மிதக்க விட்டு ராமா் பாலம் அமைத்து இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் என்றும் அங்கு வரும் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினா் இந்து சமய அறநிலையத்துறை, ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்த நிலையில், இந்த வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் அகற்றினர்.

Read More : இந்தியன் வங்கி, கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.64,000 வரை சம்பளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *