உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ஆணவத்தை அடக்க, சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னிப் பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்தப் புனிதம் நிறைந்த நாளே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
2,668 அடி உயர மலையில் தீபம் :
அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையே அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானே அக்னிப் பிழம்பாக காட்சியளித்ததின் அடையாளமாக, கார்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கமாகும். இந்தப் புனித மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாளை (டிசம்பர் 3) மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் ஐந்தரை அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான மகா தீப கொப்பரையை சுமந்துகொண்டு கோயில் ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் இன்று மலை உச்சிக்குக் கொண்டு சென்றனர். 2,600 அடிக்கும் அதிகமான உயரமுள்ள இந்த மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள்.
Read More : டிட்வா புயல் பாதிப்பு..!! விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!











