இந்திய ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள 3,058 இளநிலை கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பதவி மற்றும் காலியிடங்கள் :
Commercial (Ticket Clerk) – 2424
Accounts Clerk (Typist) – 394
Junior Clerk (Typist) – 163
Trains Clerk – 77
கல்வித் தகுதி :
* Commercial (Ticket Clerk) மற்றும் Trains Clerk பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* Accounts Clerk (Typist) மற்றும் Junior Clerk (Typist) பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி + கணினியில் தட்டச்சுத் திறன் (ஆங்கிலம்/இந்தி) பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயதுத் தளர்வு: அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரிவுகளின் அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
* முதற்கட்ட கணினி வழித் தேர்வு (First Stage CBT)
* இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வு (Second Stage CBT)
* தட்டச்சுத் திறன் தேர்வு (Typing Skill Test) / CBAT (தேவைப்படும் பதவிகளுக்கு)
* சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 28.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2025 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது).
விண்ணப்பக் கட்டணம் :
ரூ. 250: SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EBC). இவர்கள் கணினி வழித் தேர்வில் கலந்துகொண்ட பிறகு, முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
ரூ. 500: மற்ற அனைத்துப் பிரிவினர். இவர்கள் கணினி வழித் தேர்வில் கலந்துகொண்ட பிறகு, ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும் தெளிவாகப் படித்து உறுதி செய்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : Click here
Read More : Business Tips | ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த உதவும் 8 முக்கியமாக விஷயங்கள்..!! நிபுணர் கொடுக்கும் டிப்ஸ்..!!














