ATM | வங்கிச் சேவைகளை ஏடிஎம்கள் எளிதாக்கினாலும், சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளால் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது, இயந்திரத்தில் பணம் சிக்கிக் கொள்ளும் சம்பவம் பலருக்கும் நடந்திருக்கும். ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றம் மற்றும் குழப்பம் உண்டாகும்.
எனவே, ஏடிஎம்-மில் பணம் சிக்கிக்கொண்டால், முதலில் பதற்றப்பட வேண்டாம். சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பெரும்பாலும், சர்வர் பிரச்சனையால் பணம் தானாகவே வெளியே வந்துவிடும். உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தும், பணம் வெளியே வரவில்லை என்றால், அந்த சீட்டை பத்திரமாக வைத்துக்கொண்டு வங்கி வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டும்.
இதுபோன்ற புகார்களை வங்கிகள் 7 வேலை நாட்களுக்குள் சரிசெய்துவிடும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, புகார் அளித்து 45 நாட்களுக்குள் இந்த சிக்கல் தீர்க்காத பட்சத்தில், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 24 மணி நேரத்திற்குள் பணம் மீண்டும் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
அங்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உங்கள் வங்கி கிளைக்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம். புகாரளித்தப் பின் உங்களுக்கு கண்காணிப்பு எண் வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் புகாரின் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுக்கும்போது பணம் உள்ளே சிக்கிக் கொண்டால், பரிவர்த்தனை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது புகார் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார். ஆனால், இப்போது பெரும்பாலான சமயங்களில், வங்கி நிர்வாகம் 24 மணி நேரத்திற்குள் பணத்தை மீண்டும் உங்கள் கணக்கில் செலுத்திவிடும் என்பதால், கவலைப்பட தேவையில்லை.
Read More : ஜிஎஸ்டி வரி..!! ரூ.1 லட்சத்திற்கு மேல் குறையும் மாருதி சுஸுகி கார்களின் விலை..!! வாடிக்கையாளர்கள் ஹேப்பி..!!