இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அண்மையில், ஆட்டோமொபைல்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில், அதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறிய ரக கார்களுக்கான வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டது. மேலும், 1% செஸ் வரியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு மீட்டருக்கும் குறைவான கார் பிரிவில் முன்னணியில் இருக்கும் மாருதி சுஸுகியின் பல மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள், ரூ.1.29 லட்சம் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தள்ளுபடி விலையில் விற்கப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சில விளக்கங்களை வெளியிட்டுள்ளது. இனி தள்ளுபடி விலைக்கு மட்டுமே ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது இருப்புப் பொருட்களை விற்க ரூ.20,000 மதிப்புள்ள ஒரு மொபைலுக்கு 10% தள்ளுபடி வழங்கி, அதை டீலர் மூலம் ரூ.18,000-க்கு விற்கும்போது, அந்தத் தள்ளுபடி விலைக்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும். ஆனால், நிறுவனம் நேரடியாக சில்லறை விற்பனையாளருடன் ஒப்பந்தம் செய்யாமல், விநியோகஸ்தர் மூலம் தள்ளுபடி வழங்கினால், அசல் விலைக்கே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று விளக்கியுள்ளது.
Read More : ரூ.25,00,000 வரை கடன் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? எங்கு விண்ணப்பிப்பது..?