தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் ‘தாயுமானவர் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படும். இந்த திட்டம் மாதந்தோறும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் நடைபெறும் ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த முகாம், பொது விநியோக திட்டம் தொடர்பான பல்வேறு குறைகளை தீர்க்கவும் உதவுகிறது.
மேலும், இந்த குறைதீர் முகாமில் ரேஷன் அட்டை தொடர்பான பல்வேறு மாற்றங்களை செய்து கொள்ளலாம். அதாவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது, செல்போன் எண்ணை மாற்றுவது, புதிய ரேஷன் அட்டை அல்லது நகல் அட்டை கோருதல் போன்ற வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, அட்டைதாரரின் புகைப்படத்தில் உள்ள தவறுகளைச் சரிசெய்வது, ரேஷன் கடைகள் பற்றிய குறைகளை பதிவு செய்வது மற்றும் தனியார் சந்தைப் பொருட்களின் குறைபாடுகள் குறித்துப் புகாரளிப்பது போன்ற சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அங்கீகாரம் பெற்றவர்கள் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியாத முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அங்கீகாரச் சான்றும் இந்த முகாம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Read More : மானியத்துடன் 5 ஏக்கர் நிலம்..!! பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!