தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள் : 375
பணியிடம் : தமிழ்நாடு
பதிவறை எழுத்தர்: 33 காலியிடங்கள். மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை சம்பளம் கிடைக்கும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
அலுவலக உதவியாளர்: 189 காலியிடங்கள். மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர்: 68 காலியிடங்கள். மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம். 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
இரவு காவலர்: 85 காலியிடங்கள். மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 34 வரையும், ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கு 18 முதல் 37 வரையும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 என்றும், மற்ற பிரிவினருக்கு ரூ.100 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிப்பது எப்படி..? இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrd.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 30
Read More : வந்தாச்சு புதிய அறிவிப்பு..!! இனி கூகுள் பே, போன் பேவில் அதிகபட்சம் எவ்வளவு தொகை அனுப்ப முடியும்..?