இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எனப்படும் எல்.ஐ.சி.யில் (LIC) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
உதவி நிர்வாக அலுவலர்கள் (Specialist) | 410 |
உதவி நிர்வாக அலுவலர்கள் (Generalist) | 350 |
உதவி பொறியாளர் (சிவில்) | 50 |
உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) | 31 |
மொத்தம் | 841 |
கல்வித் தகுதி : துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டம், சிஏ படித்தவர்களுக்கும் காலியிடங்கள் உள்ளன. ஏஏஓ (இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்) பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு : குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகவும், அதிகபட்ச வயது 30ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிஏ மற்றும் சட்டப்பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் நபருக்கு அடிப்படை சம்பளம் ரூ.88,635 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் கிடைக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை :
➠ முதல்நிலைத் தேர்வு
➠ முதன்மைத் தேர்வு
➠ நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்ப கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.85 செலுத்தினால் போதுமானது.
தேர்வு எப்போது.? : முதல் நிலை தேர்வு 03.10.2025. மெயின் தேர்வு 08.11.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 8.09.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
https://licindia.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் : Click Here
Read More : இரவில் தூங்கிக் கொண்டிருந்த இரட்டை சிறுமிகளிடம் சில்மிஷம்..!! ஆத்திரத்தில் அண்ணன் செய்த செயல்..!!