நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு சட்டங்களை இயற்றினாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சுமன் (வயது 32). இவருக்கு, சிறுநீர் கல்லடைப்பு பிரச்சனை இருப்பதால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அடிக்கடி சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், மதுரை பக்கத்திலேயே ஒரு கிராமத்தில் இருக்கும் தன்னுடைய உறவினரான மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளார்.
அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே, இந்த மூதாட்டியின் வீட்டில் அவரது பேத்திகளான 16 வயதுடைய இரட்டை சிறுமிகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சிறுமிகள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுமன், இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், சிறுமிகள் இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, பதறிப்போன சுமன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதற்கிடையே, இந்த சம்பவத்தால் மனமுடைந்து போன ஒரு சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், சிறுமிகளின் பாட்டி அளித்த புகாரின் பேரில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சுமனை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே, சிறுமிகளின் உடன்பிறந்த அண்ணன் (வயது 19), சிகிச்சை பெற்று வரும் தங்கையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சுமன் இருப்பதை கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.
இதையடுத்து, சுமனை சிறுமிகளின் அண்ணன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுமன், மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : நாய் மட்டுமல்ல இந்த விலங்குகள் உங்களை கடித்தாலும் ஆபத்து தான்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!