தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 24 பாட வேளைகளும், மற்ற பாட ஆசிரியர்களுக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயிக்க வேண்டும். 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேபோன்று, நகர பகுதிகளில் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் குறைந்தபட்சமாக 30 மாணவர்கள் இருப்பதுதான் கட்டாயம். ஆனால், ஊரகப்பகுதிகளில் இந்த எண்ணிக்கை 15 என தளர்த்தப்பட்டுள்ளது.
ஒரு பாடத்தில் தேவைவிட அதிகமான பாடவேளைகள் இருந்தால், புதிய ஒரு ஆசிரியர் பணியிடத்தை கூடுதலாக வழங்கலாம் என்றும், ஒரு பாடத்திற்கு பல ஆசிரியர்கள் பணியாற்றும் சூழலில் உபரி பணியிடம் தோன்றினால், அங்கு பணியாற்றும் இளைய பணியாளரே உபரியாகக் கணக்கீடு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மகளுக்கு சொத்தில் பங்கு தராத தந்தை..!! வீட்டிற்கு வந்த மாமனாருக்கு மருமகன் கையால் நேர்ந்த சோகம்..!!