தூய்மை பணியாளர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இலவச காலை உணவு உள்ளிட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வந்த நிலையில், அவர்களை நேற்றிரவு காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த சூழலில், தூய்மை பணியாளர்களுக்காக புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
புதிய அறிவிப்புகள் என்னென்ன..?
➥ பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
➥ தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
➥ தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
➥ தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே பணிக்கு சென்றுவிடுவதால், அவர்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
➥ தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் பட்சத்தில், அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
➥ தூய்மை பணியாளர்களின் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ.5 லட்சத்துக்குக் காப்பீடு வழங்கப்படும்.
➥ கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க முன்னுரிமை வழங்கப்படும்.
➥ நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
Read More : ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!