இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்த சூழலில் தான், பயிற்சி பணியாளர்களை (Apprentice) நியமிப்பதற்கான அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் பட்டதாரி பயிற்சி பணியாளர்கள் பதவிகளுக்கு 475 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காலியிடங்கள் உள்ளது.
பதவியின் பெயர் : Trade, Technician மற்றும் Graduate Apprentices
மொத்த காலிப்பணியிடங்கள் : 475
பணியிடம் : தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா
கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஐடிஐ/டிப்ளமோ/டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு வயதில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் : ஊதியம், பயிற்சி காலம், தேர்வு முறை போன்றவை அனைத்தும் நிறுவன விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்.
தேர்வு செய்யப்படும் முறை :
➣ Merit List
➣ Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://www.apprenticeshipindia.gov.in/candidate-login மற்றும் https://nats.education.gov.in/student_register.php ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி : 08.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.09.2025
கூடுதல் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/Apprenticeships/Files/62ff50de2bbe4758ab366c1bfd312047.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Read More : தவெகவின் 2-வது மாநாட்டில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..? 42 கேள்விகளுக்கு பதில்..!!