அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழாவில் யூரியா கலந்த தண்ணீரை குடித்த 6 குதிரைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு கடைகள், கேளிக்கை அரங்குகள், ராட்சத ராட்டினங்கள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
குருநாதசுவாமி கோவில் திருவிழா என்றாலே மாட்டுச் சந்தையும், குதிரை சந்தையும் தான் பிரபலம். குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. இந்த சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகள் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் தான், இந்தாண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை குருநாதசுவாமி கோவில் திருவிழாவுக்கு கொண்டு வந்தார். இந்த குதிரைகளின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்து வந்தார்.
இந்த சூழலில், அந்த குதிரைகளுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். ஆனால், அந்த வாளியில் வயலுக்குத் தெளிக்க யூரியா கலந்திருந்தது என்பது அவருக்கு தெரியவில்லை. அந்த தண்ணீரை 6 குதிரைகள் குடித்துள்ளது.
யூரியா கலந்த தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் அடுத்தடுத்து மயங்கி உயிரிழந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது. திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை மற்றும் காட்சிக்காக கொண்டு வரப்பட்ட குதிரைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 60 வயது முதல் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்.. உடனே இந்த திட்டத்திற்கு அப்ளை பண்ணுங்க..
Leave a Reply