தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate – NSC) என்பது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறிப்பாக சாதாரண மக்கள், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற ஒரு நம்பகமான முதலீட்டு வாய்ப்பாகும்.
மக்கள் தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக சேமிக்கவும், வருமான வரியில் இருந்து தள்ளுபடி பெற உதவுவதையும் நோக்கமாக கொண்டு இந்த தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, வங்கிக் கணக்குகள், ஃபிக்சட் டெபாசிட் போன்ற பிற முதலீட்டு முறைகளைவிட அபாயம் இல்லாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தனியாகவும் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையிலும் கணக்கு திறக்கலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் சொந்தமாக கணக்கு தொடங்கிக் கொள்ள முடியும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 மட்டுமே. அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை வருமான வரி சட்டம் பிரிவு 80C கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
நீங்கள் முதலீடு செய்யும் காலத்தில் ஏதேனும் அவசர உதவிக்கு பணம் தேவைப்பட்டால், உங்கள் NSC-ஐ ஒரு வங்கி அல்லது NBFC-யில் அடமானம் வைத்து கடன் பெறும் வசதியும் உள்ளது. முதலீடு செய்வோரின் மரணம் அல்லது நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட காரணங்களை தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூட முடியாது.
கணவன் – மனைவி இருவரும் வருமானம் ஈட்டுபவராக இருந்தால், ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதன் மூலம் அவர்கள் அதிக நன்மைகளைப் பெறலாம். இருவரும் சேர்ந்து ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.13,04,130 கிடைக்கும். இதன் மூலம் வட்டி மட்டுமே உங்களுக்கு ரூ.4,04,130 கிடைக்கும்.
எனவே, அபாயம் இல்லாத முறையில் பணத்தை சேமித்து, அதே நேரத்தில் வரி விலக்கும் பெற விரும்பும் நபர்களுக்கு NSC திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் நம் எதிர்கால நிதி நிலையை பாதுகாக்கலாம்.
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. ஆரம்ப சுகாதார மையங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..
Leave a Reply