12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. ஆரம்ப சுகாதார மையங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..

தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அதன்படி, Staff Nurse, Pharmacist, Driver (Mobile Medical Unit), Cleaner Mobile Medical Unit, Programme cum Administrative Assistant, Occupational Therapist, Health Inspector Gr-II, Lab Technician, Multipurpose Hospital Workers, Dental Assistant ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பணி: Staff Nurse
மொத்த காலியிடங்கள் : 93
மாத சம்பளம் : மாதம் ரூ.18,000
கல்வித் தகுதி : நர்சிங் பிரிவில் டிப்ளமோ/பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist
மொத்த காலியிடங்கள் : 2
மாத சம்பளம் : மாதம் ரூ.15,000
தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருந்தாளுநர் பிரிவில் டி.பார்ம் அல்லது பி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Driver (Mobile Medical Unit)
மொத்த காலியிடங்கள் : 2
மாத சம்பளம் : மாதம் ரூ.9,000
தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் (2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்)

பணி: Cleaner Mobile Medical Unit
மொத்த காலியிடம்: 1
மாத சம்பளம் : மாதம் ரூ.6,500
தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Programme cum Administrative Assistant
மொத்த காலியிடம்: 1
மாத சம்பளம் : மாதம் ரூ.12,000
தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MS Office படித்து ஓராண்டு Accountant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Occupational Therapist
மொத்த காலியிடம்: 1
மாத சம்பளம்: மாதம் ரூ. 23,000
தகுதி: தொழில் சிகிச்சை பிரிவில் இளங்கலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம்

பணி: Health Inspector Gr-II
மொத்த காலியிடம்: 1
மாத சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: Health Inspector, Sanitary Inspector, Multipurpose Health Worker போன்ற ஏதேனும் ஒரு பணிக்கான படிப்பை முடித்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

பணி: Lab Technician
மொத்த காலியிடம்: 1
மாத சம்பளம் : மாதம் ரூ. 13,000
தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு லேப் டெக்னீசியன் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: Multipurpose Hospital Workers
மொத்த காலியிடங்கள் : 2
மாத சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Dental Assistant
மொத்த காலியிடம்: 1
மாத சம்பளம்: மாதம் ரூ. 13,800
தகுதி : உயிரியல் பாடங்களுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Dental Hygienist படிப்பை முடித்திருக்க வேண்டும் (2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்)

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்..?

இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி..?

விருப்பமுள்ளவர்கள் www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து The Executive Secretary, District Health Society, District Health Office, Dharmapuri – 636 705 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 08.08.2025ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2025/07/17537834734089.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Read More : அமெரிக்கா விதித்த 50% வரி.. இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *