தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) காலியாகவுள்ள 1,794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் மற்றும் தகுதிகள் :
பதவியின் பெயர் : கள உதவியாளர்
மொத்த காலியிடங்கள் : 1,794
கல்வித் தகுதி : தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்சார்ந்த கவுன்சிலால் (NCTV) வழங்கப்பட்ட எலக்ட்ரீசியன், வயர்மேன் அல்லது எலக்ட்ரிக்கல் டிரேடில் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) அல்லது தேசிய அப்ரென்டிஸ் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை வழங்கப்படும்
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர்கள், ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு (மாற்றுத்திறனாளிகள், SC, ST, ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) கட்டணச் சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2025
தேர்வு நடைபெறும் தேதி : 16.11.2025 (காலை மற்றும் மாலை என இரண்டு தாள்கள் நடைபெறும்).
விண்ணப்பிப்பது எப்படி..?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
Read More : உண்மையிலேயே “No Cost EMI” பயன் தருமா..? மறைமுக கட்டணங்களை கவனிச்சீங்களா..!! வாடிக்கையாளர்களே உஷார்..!!