இன்றைய இளம் தலைமுறையினர் அறிவாற்றல், தொழில்நுட்ப வல்லமை, திறமை என பல்வேறு திறன்களை கொண்டுள்ளனர். ஆனால், அதே சமயம் சில தவறான பழக்கங்களால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. அந்த வகையில், இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டிய 10 முக்கியமான பழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நேரக் கட்டுப்பாடு அவசியம் : முதலில், நேரத்தை நிர்வகிக்க முடியாமல் போவது இன்றைய இளைஞர்களின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. ‘பிறகு செய்து கொள்ளலாம்’ என தள்ளிவைக்கும் பழக்கம் அவர்களின் செயல்களையும், கனவுகளையும் தாமதிக்கிறது. இதற்குப் பதிலாக தன்னிச்சையான நேர கட்டுப்பாடு வளர்க்கப்பட வேண்டும்.
சமூக வலைதளங்களில் அடிமை : இரண்டாவது, இன்றைய இளைஞர்கள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். தினசரி 5 முதல் 6 மணி நேரம் வரை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளில் செலவழிப்பது, நேரத்தையும் நலனையும் சூறையாடுகிறது. இது படிப்பில் கவனக்குறைவையும், உறவுகளில் சில சிக்கல்களையும் உண்டாக்குகிறது. (தினமும் நீங்கள் சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள்…?)
உணவுப் பழக்கம் : மூன்றாவது, உணவுப் பழக்கம் தான். ஜங்க் ஃபுட் மீது காட்டப்படும் ஈர்ப்பு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய முக்கியப் பிரச்சனையாகும். இளம் தலைமுறையினர் தூய்மையான மற்றும் சத்தான உணவுகளுக்குப் பதிலாக, துரித உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். இது நீண்ட காலத்தில் பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை : அடுத்ததாக, சிலருக்கு ‘late night scroll’ பழக்கமாகிவிட்டது. தினமும் 2 மணி நேரம் குறைவாக தூங்குவதால், உழைப்பின் நேர்த்தியும், மனக்கவனமும் பாதிக்கப்படுகிறது. எனவே, தூங்கும் நேரத்தை நிரந்தரமாக உறுதி செய்து, தூங்கும் முன் செல்போனை வைக்க ஒரு மன உறுதியை உருவாக்க வேண்டும்.
திட்டமிடல் முக்கியம் : பண செலவுகளை திட்டமிடாத பழக்கம், இளைஞர்களின் மற்றொரு முக்கிய பிரச்சனை ஆகும். சம்பளம் வந்த உடனேயே செலவழித்து, சேமிக்காத பழக்கம் எதிர்கால நிதி பாதுகாப்பை சீர்குலைத்துவிடும். சிறிய அளவில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒப்பிடும் பழக்கம் : மற்றவர்களுடன் ஒப்பிடும் பழக்கம் இருக்கக் கூடாது. இது கடுமையான மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். “அவன் பாரு எவ்வளவு சம்பாதிக்குறான்… நான் ஏன் இவ்வளவு தான் சம்பாதிக்கிறேன்” என்ற எண்ணம் மனதை தளரச் செய்கிறது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் பாதை தனிப்பட்டது என்பதை உணர வேண்டும்.
திறமை பறிபோக வாய்ப்பு : ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட நினைப்பது பல விஷயங்களைச் சரியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இதனால் உங்கள் திறமையைக் காட்ட முடியாமல் போக வாய்ப்புள்ளது.
உடல் ஆரோக்கியம் : உடற்பயிற்சி குறைவாக இருப்பதும் இளைஞர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் அதிகம் பாதிக்கிறது. தினசரி நடைபயிற்சி அல்லது யோகா போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமானதாகும்.
உண்மை தகவல் தெரியாமல் பேசுவது : இளம் தலைமுறையினர் பல நேரங்களில் தகவல் இல்லாமல் பேசும் பழக்கத்திற்கும் உட்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பகிர்வது அல்லது உண்மை தகவல் அறியாமலேயே விவாதங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
கனவுகள் பறிபோகும் : இறுதியாக, “நாளைக்கு பார்ப்போம்” என்ற மனப்பான்மை, ஒரு செயலைத் தள்ளிவைக்கும் பழக்கம் அவர்களின் கனவுகளைப் பறிகொடுக்கச் செய்யும். இன்று செய்ய வேண்டியதை இன்று செய்வது வளர்ச்சிக்கான அடித்தளம்.
இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் முழுமையான பொறுப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிய பழக்கங்களின் மாற்றமே பெரிய வெற்றிக்கு வழிகாட்டியாக அமையும்.
Read More : மாதம் ரூ.35,000 சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலை..!! 2,200 + காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
English Summary :
10 Bad Habits the Young Generation Must Avoid for a Better Future..!!
In today’s fast paced world, the younger generation possesses immense talent and technical skills. However, certain everyday habits like poor time management, digital distractions, unhealthy eating, and lack of planning can derail their potential. This article explores 10 common bad habits modern youth should avoid. offers guidance to lead a healthy, focused and successful life.
Leave a Reply